2018இல் பிரான்சு வரிசையில் எம்பாப்பே | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | கிலியான் எம்பாப்பே லோத்தன் | ||
பிறந்த நாள் | 20 திசம்பர் 1998 | ||
பிறந்த இடம் | பாரிஸ், பிரான்சு | ||
உயரம் | 1.78 மீ | ||
ஆடும் நிலை(கள்) | முன்கள வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | பாரிசு செயின்ட்-செர்மைன் (மொனாக்கோ கழகத்திடமிருந்து கடனாக) | ||
எண் | 29 | ||
இளநிலை வாழ்வழி | |||
2004–2013 | ஏஎஸ் பான்டி | ||
2013–2015 | மொனாக்கோ | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2015–2016 | மொனாக்கோ பி | 12 | (4) |
2015– | மொனாக்கோ | 41 | (16) |
2017–2018 | → பாரிசு செயின்ட்-செர்மைன் (கடன்) | 27 | (13) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2014 | பிரான்சு 17 கீழ் | 2 | (0) |
2016 | பிரான்சு 19 கீழ் | 11 | (7) |
2017– | பிரான்சு | 19 | (7) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 13:22, 16 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 16:00, 30 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. |
கிலியான் எம்பாப்பே லோத்தன் ( Kylian Mbappé Lottin, பிரெஞ்சு உச்சரிப்பு: ; பிறப்பு 20 திசம்பர் 1998) பிரான்சிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் மொனாக்கோ கழகத்திடமிருந்து பாரிசு செயின்ட்-செர்மைன் கழகத்திற்கு கடனாகத் தரப்பட்டு ஆடி வருகிறார். இந்த அணியிலும் பிரான்சு தேசிய அணியிலும்முன்கள வீரராக இருந்து வருகிறார்.
எம்பாப்பே சிறுவயதிலேயே முதன்மையிடத்தை எட்டியவர்; இளையோர் அகாதமிகளான ஏஎஸ் பான்டி, கிளையர்பொன்டைன், மொனாக்கோ அணிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இறுதியில் மொனாக்கோ அணியில் தமது தொழில்முறை அறிமுகத்தைத் தொடங்கினார். தொடர்ந்து இவ்வணியில் வழமையாக கோல்கள் எடுப்பவராக 2016–17 பருவத்தில் பதினேழு ஆண்டுகளில் முதல்முறையாக மொனாக்கோ அணி வெற்றிபெற உதவினார். அடுத்த பருவத்தில் பாரிசு செயின்ட்-செர்மைன் கழகத்திற்கு கடனாக வழங்கப்பட்டு பின்னர் பருவம் முடிந்த பிறகு நிரந்தரமாக எடுத்துக்கொள்ள €180 மில்லியனுக்குப் பேசப்பட்டுள்ளார். இதனால் மிகவும் விலைமதிப்புள்ள இளைஞராகவும் இரண்டாவது மிகவும் விலைபேசப்பட்ட வீரராகவும் விளங்குகிறார்.
எம்பாப்பே பன்னாட்டுப் போட்டிகளில் மூத்தோர் பிரிவில் பிரான்சிற்காக மார்ச் 2017இல் முதலில் ஆடினார். முன்னதாக பிரான்சின் 17 கீழ், 19 கீழ் அணிகளில் ஆடியுள்ளார். பெருவிற்கு எதிராக 2018 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டத்தில் 19 வயதில் கோலடித்து பிரான்சின் மிக இளைய கோல் எடுத்தவராக சாதனை படைத்தார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)